/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் அ.தி.மு.க., கூட்டம்
/
ஒட்டன்சத்திரத்தில் அ.தி.மு.க., கூட்டம்
ADDED : மார் 31, 2024 06:50 AM
ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க., கூட்டணி எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகமது முபாரக் அறிமுக கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம்ஒட்டன்சத்திரத்தில் நடந்தது.
கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜ் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிரமணி, நகரச் செயலாளர் எஸ்.நடராஜன் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன் , நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மேயர் மருதராஜ், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிவக்குமார், மேற்கு மாவட்ட பொருளாளர் எஸ்.ஏ.பழனிவேல், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்பன் கருப்புசாமி, கீரனுார் பேரூர் செயலாளர் குப்புசாமி, தொகுதி பொதுக்குழு உறுப்பினர் உதயம்ராமசாமி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் செல்வராஜ், சண்முகவேல், மேற்கு மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் கே.பி.வி. மனோகரன் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசுகையில்,'' 100 சதவீத பெண்களுக்கு மாதம் ரூ.1000 தருவதாக தி.மு.க., வாக்குறுதி கொடுத்துவிட்டு தகுதி இல்லை எனக் கூறி 50 சதவீத பெண்களுக்கு கொடுக்கவில்லை.
தி.மு.க., பா.ஜ., இரு கட்சிகளும் முதலிடம் எங்களுக்குத் தான் என்கின்றனர்.
இரண்டாம் இடம் யாருக்கு என்பதில்தான் இருவருக்கும் போட்டி. முதலிடம் அ.தி.மு.க., கூட்டணிக்கே. இதனை யாராலும் தடுக்க முடியாது, என்றார்.

