/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அவசியமாகுது நடவடிக்கை: ரோட்டோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகள்
/
அவசியமாகுது நடவடிக்கை: ரோட்டோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகள்
அவசியமாகுது நடவடிக்கை: ரோட்டோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகள்
அவசியமாகுது நடவடிக்கை: ரோட்டோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகள்
ADDED : மார் 23, 2024 06:28 AM

மாவட்டத்தில் திண்டுக்கல்லை மையமாக கொண்டு திண்டுக்கல் -கரூர், திண்டுக்கல் - மதுரை, திண்டுக்கல்-- பழநி, திண்டுக்கல் -திருச்சி, திண்டுக்கல் -நத்தம், திண்டுக்கல் -குஜிலியம்பாறை கரூர் என பல்வேறு ரோடுகள் செல்கின்றன. இந்த ரோடுகளின் ஓரப்பகுதிகளில் வழி நெடுகிலும் ஆங்காங்கே கோழி கழிவுகள், வாழை இலை தார் கழிவுகள், பழைய சாக்கு கழிவுகள், பயன்பாடுத்த முடியாத வெங்காயம் என வீணான பொருட்களை வாகனங்களில் கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர்.
வாகனங்களை ரோட்டோரங்களில் நிறுத்துவது போல் நிறுத்திவிட்டு கழிவுகளை தள்ளிவிட்டு செல்கின்றனர். இதேபோல் ஆள் நடமாட்டம் இல்லாத சாலை ஓரங்களில் செப்டிக்டேங்க் கழிவுகளையும் கொட்டி செல்கின்றன.
இருவழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றியமைத்து போக்குவரத்தை சீர் செய்துள்ள நிலையில் சாலையோரங்களில் கொட்டப்படும் கழிவுகளால் வழி நெடுகிலும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. என்னதான் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் சுற்றி வந்தாலும் குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க முடியவில்லை. இதற்கோர் வழிகாண மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும்.

