/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்து
/
ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்து
ADDED : ஏப் 26, 2024 12:33 AM

தரம் இல்லாத பாலம்
ஆத்துார் தாலுகா அக்கரைப்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட சாக்கடை பாலம் தரம் இல்லாததால் லாரி செல்லும்போது சேதமடைகிறது. கழிவு நீர் தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது . இதை சரி செய்ய வேண்டும். பிரபாகரன், அக்கரைப்பட்டி.
..........------குப்பை குவியல்
பழநி அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டு செல்லும் வழியின் முன்பு குப்பை அகற்றாமல் குவிந்துள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது .தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கி.ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.
...............
ஆபத்தான பள்ளம்
நத்தம் நெடுஞ்சாலையில் கோபால்பட்டியில் கிளைச் சாலையில் ஆபத்தான பள்ளம் ஏற்பட்டுள்ளது. விபத்து அபாயம் உள்ளதால் சாலை அருகே உள்ள ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளங்கோ, கோபால்பட்டி.-------குழாய் உடைப்பு
பழநி ஒட்டன்சத்திரம் ரோட்டில் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் பல நாட்களாக வீணாகி வருகிறது. இதனை சீரமைக்காமல் விட்டதால் புற்கள் முளைத்துள்ளது. குழாயை சீரமைக்க வேண்டும். -துரைச்சாமி, ஒட்டன்சத்திரம்.
.........--------
மாடுகளால் சிரமம்
திண்டுக்கல் காந்தி மார்க்கெட் அருகே ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் உள்ளது .கால்நடைகள் ஆங்காங்கே திரிவதால் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர் . ரோட்டில் விடுவதை தடுக்க வேண்டும். முத்துக்குமார், திண்டுக்கல்.
...........---------போக்குவரத்துக்கு சிரமம்
திண்டுக்கல் -திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் விபத்தும் நடக்கிறது .ரோடு பணியை தற்காலிகமாக மண்மேவாமல் நிரந்தரமாக அமைக்க வேண்டும்.
ஆறுமுகம் குழந்தை ,முள்ளி பாளையம்
............
சாக்கடையில் அடைப்பு
திண்டுக்கல் காந்தி மார்க்கெட் அருகே சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் விசுகிறது .கொசுக்கள் உற்பத்தியாகி பாதிப்பும் ஏற்படுகிறது. அதிக மக்கள் வந்து செல்லும் இடம் என்பதால் இதை துார்வாரி கழிவுநீர் செல்ல வழி காண வேண்டும். பிரபு, திண்டுக்கல்.
.............----

