மாணவிகள் முகாம்
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.தோட்டக்கலை கல்லுாரி மாணவிகள் சார்பில் மண்ணில்லா வேளாண்மை எனும் நீரியியல் வளர்ப்பு ஆலோசனை முகாம் அகரத்தில் நடந்தது. மாணவிகள் தினா, வைஷ்ணவி, வர்ஷா, வினோதா உபாஷினி, விவேகா, யாஷிகா ஸ்ரீ பங்கேற்றனர்.
செயல் விளக்கம்
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.தோட்டக்கலை கல்லுாரி சார்பாக மாணவிகள் தேனிவளர்ப்பு முறைகள் பற்றிய செயல்விளக்கம் பழநி ரோடு விருப்பாச்சியில் நடத்தினர். விவசாயி காளிமுத்துக்கு பயிற்சி அளித்து தேனி வளர்ப்பு முறை, பாதுகாப்பு, வருமானம், சந்தைப்படுத்துதல் ஆகியவை குறித்து எடுத்து கூறினர். மாணவிகள் தேவதீட்சிண்யா, திவ்யஸ்ரீரிதா, திரிஷா, கஸ்கா, காய்திரி, கோகுலவர்த்தினி பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு அனுபவச்சான்று
நத்தம்: குட்டூரில் உள்ள கரந்தலைச்சாரல் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் வேளாண்மை மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் எஸ்.ஆர்.எஸ் விவசாயக்கல்லூரி மாணவர்களுக்கு கிராம விவசாயம் பற்றிய அனுபவச்சான்று வழங்கப்பட்டது. வேளாண் பொறியியல்துறை உதவிப்பொறியாளர் சரவணமுத்து ஆலோசனை வழங்கினார். வேளாண்மை அலுவலர் தாரணி, கோபிநாத் சான்றிதழ் வழங்கினர். எஸ்.ஆர்.எஸ். வேளாண் கல்லுாரி மாணவர்களுக்கு உரம் , நோய்களை கட்டுப்படுத்துதல் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

