/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
2121 மையங்களுக்கு 2331 தொகுப்புகள்
/
2121 மையங்களுக்கு 2331 தொகுப்புகள்
ADDED : ஏப் 19, 2024 06:03 AM
திண்டுக்கல்: தேர்தலுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் 2121 ஓட்டு சாவடி மையங்களுக்கு தேவையான 2331 தொகுப்புகளும் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 2121 ஓட்டுச்சாவடி மையங்களில் இன்று 18,77,414 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
ஓட்டுச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், உறுதி செய்யும் இயந்திரம் உட்பட 131 பொருட்கள் அடங்கிய 2331 தொகுப்புகள் 2121 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பிற்காக 210 தொகுப்பும் தயார் நிலையில் உள்ளன. இவைகள் நேற்று ஓட்டுச்சாவடிகளுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

