/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தல்: தொழிலாளி கைது
/
ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தல்: தொழிலாளி கைது
ADDED : மே 14, 2024 06:05 AM
திண்டுக்கல் : ஒட்டன்சத்திரத்தில் 1 டன் ரேஷன் அரிசியை ஆம்னி வேனில் கடத்திய கூலித்தொழிலாளி ரமேஷை போலீசார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் விராலிப்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரமேஷ்45. மாடு வளர்ப்பில் ஈடுபடுகிறார்.
ரமேஷ் மாட்டிற்கு தீவனமாக ஒட்டன்சத்திரம் சுற்றுப்பகுதிகளில் குறைந்தவிலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி பயன்படுத்துகிறார். அதிக மாடு வைத்திருப்பவர்கள் ரேஷன் அரிசி கேட்டால் விற்பனையும் செய்கிறார். நேற்று ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து 1 டன் ரேஷன் அரிசியை வேனில் ஏற்றியப்படி விராலிப்பட்டி நோக்கி வந்தார். திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.ஐ.,ராதா தலைமையில் போலீசார் வேனை சோதனையிட்டனர்.
ரேஷன் அரிசி கடத்தியது தெரியவர அவரை கைது செய்தனர். ரேஷன் அரிசி, வேனையும் பறிமுதல் செய்தனர்.

