/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் காப்பாற்ற முயன்ற கணவர் உட்பட மூவர் மீட்பு

ADDED : ஏப் 04, 2024 03:44 AM
திண்டுக்கல், : திண்டுக்கல்லில் கணவரிடம் சண்டையிட்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்ற முயன்ற கணவர் உட்பட மூவரும் கிணற்றில் சிக்கினர். தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி மீட்டனர்.
திண்டுக்கல் மரியநாதபுரத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி செல்லமுத்து.இவரது மனைவி ருக்குமணி. இருவர் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்துள்ளது.
நேற்றும் தகராறு நடந்தது. விரக்தியடைந்த ருக்குமணி வீட்டு பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இவரை காப்பாற்ற செல்லமுத்துவும் கிணற்றில் குதித்தார்.
இருவரும் கிணற்றில் உயிருக்கு போராடினர். இதைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் கிணற்றில் குதித்து காப்பாற்ற முயன்றார்.
மூவரும் மேலே ஏற முடியாமல் கிணற்றில் தவித்தனர். அப்பகுதியினர் கிணற்றிற்குள் கயிறை போட்டுள்ளனர். மூவரும் கயிறை பிடித்தவாறு உயிருக்கு போராடினர்.
திண்டுக்கல் தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வீரர்கள் 1 மணி நேரத்திற்கு மேல் போராடி மூவரையும் மீட்டனர். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.