ADDED : ஏப் 04, 2024 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு அகரம் முத்தலாம்மன் கோயிலில் ஏப்.1ல் உள்ளூர் மக்களால் திருவிழா நடத்தப்பட்டது.
கோயில் சார்பில் மோர்,பானகம் வழங்கப்பட்டது. இதை வாங்கி பருகிய அகரம் பகுதியை சேர்ந்த மக்கள் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஜோதிமணி, செல்வம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து மோர்,பானகம் தயாரிக்க பயன்படுத்திய பொருட்களை ஆய்வுக்கு எடுத்தனர்.

