ADDED : ஜன 25, 2026 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஜன., 26 வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாசில்தார் சின்னா தலைமையேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி, தர்மபுரி ரோடு, போலீஸ் ஸ்டேஷன், 4 ரோடு, பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் வாக்காளர்கள், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி, பதாகைகள் ஏந்தி, துண்டு பிரசுரங்களை மாணவியர் வழங்கினர். தொடர்ந்து வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. பேர-ணியில் தேர்தல் துணை தாசில்தார் சுதேஸ்வரி, முதுநிலை ஆர்.ஐ., கார்த்திக், எஸ்.ஐ., நேரு, தலைமை ஆசிரியர் இளமதி, உதவி தலைமை ஆசிரியர் மாரி கருணாநிதி கலந்து கொண்டனர்.

