ADDED : மே 03, 2026 01:58 AM
அரூர்: அரூர் அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள, குமரன் தடுப்ப-ணையை சீரமைக்கும் பணியை விரைந்து துவங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த குமாரம்பட்டியில், தென்-பெண்ணையாற்றின் குறுக்கே குமரன் தடுப்பணை கட்டப்பட்டுள்-ளது. இந்த தடுப்பணையில் இருந்து, இடதுபுற கால்வாய் வழி-யாக, 4 கி.மீ., துாரத்திற்கு செல்லும் தண்ணீரால் பாப்பனாவ-லசை, மாம்பட்டி, இட்லப்பட்டி, குமாரம்பட்டி உள்ளிட்ட கிரா-மங்களில் குடிநீர் பிரச்னை தீர்வதுடன், பல ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும், விவசாய நிலங்களில் உள்ள கிணறு-களின் நீர்மட்டமும் உயர்கிறது.
இந்நிலையில் குமரன் தடுப்பணை மற்றும் அதன் பாசன கால்வாய்களை சீரமைத்திட கடந்த அ.தி.மு.க., ஆட்-சியில், 4.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, 10 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், தற்போது பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் தெரி-வித்துள்ள விவசாயிகள், உடனடியாக குமரன் தடுப்பணையை சீரமைக்கும் பணியை விரைந்து துவங்க வேண்டும் என வலியு-றுத்தி உள்ளனர்.
