/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பிளாஸ்டிக் குப்பையை அகற்ற வலியுறுத்தல்
/
பிளாஸ்டிக் குப்பையை அகற்ற வலியுறுத்தல்
ADDED : அக் 23, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அக். 23-
அரூரில் இருந்து, கடத்துார் செல்லும் சாலையில், குரங்குபள்ளம் அருகே டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இங்கு, மதுபானங்களை வாங்கும் குடிமகன்கள், அருகில் உள்ள வனப்பகுதியில், மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பின், தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்களை, அப்பகுதியில் குடிமகன்கள் வீசிச் செல்வதால், பிளாஸ்டிக் குப்பை மலை போல் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பிளாஸ்டிக் குப்பையை மான் உள்ளிட்ட வன
விலங்குகள் சாப்பிட்டு, உயிரிழக்கும் அபாயம்
உள்ளது. எனவே, அவற்றை அகற்ற வேண்டும்.

