/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிரானைட் கற்கள் கடத்திய இருவர் கைது
/
கிரானைட் கற்கள் கடத்திய இருவர் கைது
ADDED : நவ 24, 2024 02:59 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியி-லாளர் புவனமாணிக்கம் உள்ளிட்ட அலுவலர்கள், சுரங்க துறை துணை இயக்குனர் உத்தரவின்படி, பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதியின்றி பல வண்ணம் கொண்ட, 11 கிரானைட் கற்கள் இருந்தது கண்டுபிடிக்-கப்பட்டது. அவை உரிய அனுமதி இன்றி திருட்டுத்தனமாக எடுத்து செல்வது தெரிய வந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, காஞ்சிபு-ரத்தை சேர்ந்த டிரைவர் சுரேஷ், 32, காளிப்பேட்டையை சேர்ந்த சுப்பிரமணி, 48, ஆகிய இருவரையும் கைது செய்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள், 15, லட்சம் ரூபாய் மதிப்பி-லான லாரியை பறிமுதல் செய்தனர்.

