/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொப்பையாறு அணை நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்வு
/
தொப்பையாறு அணை நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்வு
தொப்பையாறு அணை நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்வு
தொப்பையாறு அணை நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்வு
ADDED : நவ 27, 2025 02:40 AM
தர்மபுரி, தொப்பூர் அருகே உள்ள, தொப்பையாறு அணையின் நீர்மட்டம், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், உயர்ந்து வருகிறது.
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்துள்ள தொப்பையாறு அணை, 50 அடி உயரம், 298.6 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. சேலம் மாவட்டத்தில் ஏற்காடு மலை மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் பொம்மிடி, ஊத்துப்பள்ளம் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து, வேப்பாடி ஆற்றின் மூலம், தொப்பையாறு அணைக்கு நீர்வரத்து வரும். கடந்த செப்., மாதம் வரை அணைக்கு நீர்வரத்தின்றி, 25 அடியாக, 59 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டும் இருப்பு இருந்தது. கடந்த மாதம் முதல், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று அணைக்கு வினாடிக்கு, 131 கன அடி நீர்வரத்தானது. அணை நீர்மட்டம் காலை, 6:00 நிலவரப்படி, 43.63 அடி, 211 மில்லியன் கடி அடியாக இருந்தது. மழை மற்றும் நீர்வரத்து அதிகரித்தால், ஓரிரு வாரங்களில் அணை முழுகொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. இதனால், தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள, 5,330 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

