/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மானியத்தில் புல் நறுக்கும் இயந்திரம் வழங்கல்
/
மானியத்தில் புல் நறுக்கும் இயந்திரம் வழங்கல்
ADDED : நவ 26, 2025 02:04 AM
தர்மபுரி, தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை மூலம், 50 சதவீத மானியத்தில், 200 விவசாயிகளுக்கு புல் நறுக்கும் கருவிகளை மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று வழங்கி பேசுகையில், ''தர்மபுரி மாவட்ட விவசாயிகள் அதிகளவில், கால்நடைகளை நம்பி தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.
2 எச்.பி., மோட்டருடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எளிய புல் நறுக்கும் ஒரு இயந்திரத்தின் விலை, 25,935 ரூபாய். இதில், அரசு மானியம், 12,967 ரூபாய் பயனாளிகளின் பங்குத்தொகை, 12,967 ரூபாய். இதுபோன்று கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு, அரசு வழங்கும் திட்டங்களை பயன்படுத்தி கொள்ளுங்கள்,'' என்றார்.
இதில், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, நகராட்சி சேர்மன் லட்சுமி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் மரியசுந்தர், துணை இயக்குனர் அருள்ராஜ், இலக்கியம்பட்டி கால்நடை பெரு மருத்துவமனை மருத்துவர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

