/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தென்கரை கோட்டை ஏரிக்கரை வெடிப்பால் திடீர் பரபரப்பு
/
தென்கரை கோட்டை ஏரிக்கரை வெடிப்பால் திடீர் பரபரப்பு
தென்கரை கோட்டை ஏரிக்கரை வெடிப்பால் திடீர் பரபரப்பு
தென்கரை கோட்டை ஏரிக்கரை வெடிப்பால் திடீர் பரபரப்பு
ADDED : டிச 14, 2024 02:48 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, தென்கரை கோட்டை ஏரி நிரம்பி-யதால், கரையில் வெடிப்புகள் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்-டது.
தர்மபுரி மாவட்டம்,
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை, 65.27 அடி கொள்ளளவு கொண்டது. 63.30 அடிக்கு நிரம்பியதால் அணையி-லிருந்து கடந்த, 1ல், 3,750 கன அடி, 3 ல், 1,125 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. தற்போது அணைக்கு, 375 கன அடி தண்ணீர் வருகிறது. இது அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
அணையின் உபரி நீர் திறப்பால் வெங்கட சமுத்திரம், ஆலாபுரம், ஓந்தியாம்பட்டி, பறையப்பட்டி, தென்கரை கோட்டை ஏரிகள் நிரம்பின. இதில், தென்கரைக்கோட்டை ஏரிக்கு நீர்வரத்து அதிக-ரிப்பால், ஏரிக்கரையில், 200 மீட்டர் அளவிற்கு வெடிப்பு ஏற்பட்-டுள்ளது. இதனால், ஏரி உடையும் அபாயம் உள்ளதாக பொதுமக்-களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி, பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் வள்ளி, கடத்துார் பி.டி.ஓ., கலைச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் ஏரி வெடிப்பு ஏற்-பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து ஏரியில் இருந்து, கோடி நீர் வெளியேறும் பகுதியில் தடுப்பு கற்கள் உடைக்கப்பட்டது. தண்ணீர் அதிகளவில் கல்-லாற்றில் விடப்பட்டது. ஏரி பகுதியில் பாதுகாப்பு கருதி ஏரிகரை-யோரம் உள்ள டாஸ்மாக் மூடப்பட்டது. கரையோரம் குடியி-ருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்-பட்டுள்ளது. மேலும் தென்கரைகோட்டை- - ஏ.பள்ளிப்பட்டி சாலையும், கோபாலாபுரத்தில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் பொதுமக்கள், வாகனங்கள் செல்லாதவாறு போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்-ளனர்.
கரையில் வெடிப்பு ஏற்பட்டதையடுத்து, தென்கரைக்கோட்-டைக்கு வாணியாற்றில் இருந்து வரும் தண்ணீரை அதிகாரிகள் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 500 மணல் மூட்டைகள் கரைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: தென்கரை கோட்டை ஏரி, 9 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. தற்போது ஏரியில், 13 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. கூடுதலாக தண்ணீர் வந்ததால் ஏரியின் முழு கொள்ளளவை தாண்டி உள்ளது. இதனால் கரையில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. மக்கள் பாது-காப்பு கருதி ஏரியிலிருந்து தண்ணீர் அதிகளவு வெளியேற்றப்ப-டுகிறது. மழைக்கு முன்னால் ஏரிக்கரை பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் தற்-போது ஏரியிலிருந்து அதிகளவு தண்ணீர் வீணாக ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இவ்வாறு கூறினர்.

