/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு எஸ்.பி., பாராட்டு
/
சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு எஸ்.பி., பாராட்டு
சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு எஸ்.பி., பாராட்டு
சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு எஸ்.பி., பாராட்டு
ADDED : பிப் 28, 2024 02:36 AM
தர்மபுரி:அகில
இந்திய சிலம்பம் சம்மேளம் பொதுச்செயலாளர் ஐரின் செல்வராஜ்
தலைமையில் கடந்தாண்டு அக்.,ல் கடலுாரில் தேசிய சிலம்ப போட்டி நடந்தது.
இதில், தமிழக அணி சார்பாக, தர்மபுரி மாவட்டம் அரூர் சேர்ந்த, 21 மாணவ,
மாணவியர் குழுவாக பங்கேற்று முதல், 3 இடங்களை பிடித்தனர். இதன்
தொடர்ச்சியாக, ஆசிய அளவில், ஆசியன் சிலம்பம் சம்மேளனம் சாம்பியன்ஷிப்
சிலம்பு போட்டி, கடந்தாண்டு, டிச., 26 முதல் 29 வரை நாகர்கோயிலில்
நடந்தது. இதில், இந்திய அணியில் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த, 3
மாணவியர், 9 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 3 தங்கம், 7 வெள்ளி, 13
வெண்கலம் என, மொத்தமாக, 23 பதக்கங்கள் பெற்று இந்திய அணி, 'சாம்பியன்
ஷிப்' கோப்பை வெல்ல, உறுதுணையாக இருந்தனர். அவர்களை அழைத்து,
தர்மபுரி மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் பாராட்டு தெரிவித்தார்.