/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தூய்மை பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
/
தூய்மை பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 07, 2024 06:49 AM
தர்மபுரி : தர்மபுரியில், மாவட்ட முனிசிபல் பஞ்சாயத்து, பொது பணியாளர்கள் சங்கம், ஊராட்சி, பேரூராட்சி, டேங்க் ஆப்பரேட்டர், துாய்மை பணியாளர் சம்மேளனம், உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தர்மபுரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். இதில், பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள், டேங்க் ஆப்பரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியம் தருவதில், ஊதியம் வழங்க தமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். பேரூராட்சியில் பணியாற்றும் துாய்மை காவலர்களுக்கு, பணி பதிவேடு வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்கள் மற்றும் டேங்க் ஆப்பரேட்டர்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும்.
மேலும், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதை உறுதிபடுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், எ.ஐ.டி.யூ.சி., மாநில துணைத்தலைர் மணி, விவசாய தொழிலாளர் சங்க, மாநில செயலாளர் பிரதாபன் உள்பட பலர், கலந்து கொண்டனர்.

