/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 28, 2024 02:40 AM
தர்மபுரி:தர்மபுரியில்,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், 10 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம்
அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்
சங்க, மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். இதில், இளநிலை மற்றும்
முதுநிலை ஆர்.ஐ., பெயர் மாற்ற அரசாணை அடிப்படையில் விதித்திருந்த
ஆணையை உடனடியாக வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை
துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு, அனைத்து நிலை
அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து
தாலுகாவிலும், சான்றிதழ் வழங்கும் பணிக்கு என, புதிய துணை தாசில்தார்
பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில், பணிகளை
தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டை உடனடியாக
வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி
கோஷமிட்டனர். துணைத்தலைவர் அன்பு உட்பட, பலர் கலந்து கொண்டனர்.

