/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரயில்வே மேம்பாலம் அமைக்க தீர்மானம்
/
ரயில்வே மேம்பாலம் அமைக்க தீர்மானம்
ADDED : ஜன 27, 2026 06:12 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திக்கு உட்பட்ட ஜெர்தலாவ், பி.செட்டிஹள்ளி, எர்ரன-ஹள்ளி உட்பட மூன்று பஞ்.,களில் கிராமசபை கூட்டம் நடந்தது.
அதை தொடர்ந்து, மூங்கப்பட்டி மற்றும் பி.கொல்-லஹள்ளியில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் பொதுமக்களின் நலன்கருதி, புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.
பி.கொல்ல-ஹள்ளி முதல் எர்ரனஹள்ளி வரை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். பி.செட்டிஹள்ளி பஞ்., பெல்ரம்பட்டி கூட்ரோட்டில் இருந்து, காட்டு மாரி-யம்மன் கோவில் வரை விபத்து குறித்து, எச்ச-ரிக்கை பலகை, தெருவிளக்கு அமைக்க வேண்டும். டெங்கு, மலேரியா உட்பட நோய்-களை தவிர்க்க, சுகாதாரத்தை மேம்படுத்துதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

