/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆவின் பாலகம் அருகிலுள்ள பூங்காவை சீரமைக்க கோரிக்கை ..
/
ஆவின் பாலகம் அருகிலுள்ள பூங்காவை சீரமைக்க கோரிக்கை ..
ஆவின் பாலகம் அருகிலுள்ள பூங்காவை சீரமைக்க கோரிக்கை ..
ஆவின் பாலகம் அருகிலுள்ள பூங்காவை சீரமைக்க கோரிக்கை ..
ADDED : ஜூலை 14, 2025 04:15 AM
தர்மபுரி: தர்மபுரி டவுன், ஆவின் பாலகம் அருகே உள்ள பூங்காவை சீர-மைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி நான்கு ரோடு அருகே, பால் குளிரூட்டும் நிலைய வளா-கத்தில், தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில், ஆவின் நவீன பாலகம் மற்றும் பூங்கா கடந்த, 2017ம் ஆண்டு, 52 லட்சம் ரூபாய் மதிப்பில், விரிவாக்கம் செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது. இதில், பாலகம் அருகில் அமைக்கப்-பட்ட பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு தளவாடங்கள் மற்றும் பெரியவர்கள் அமர்ந்து ஓய்வெடுப்பதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டன. தற்போது, சிறுவர்கள் விளையாடும் தளவா-டங்கள் மற்றும் அதன் இரும்பு படிக்கட்டுகள் உடைந்து சேதம-டைந்துள்ளது. மேலும் அங்கு, மின் விளக்குகளுக்காக அமைக்கப்-பட்ட ஒயர்கள் ஆங்காங்கே துண்டாகி, அபாயகரமான நிலையில் உள்ளன. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, பூங்காவை சீர-மைக்க, நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.

