/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிறுமி பாலியல் பலாத்காரம்: அரூரை சேர்ந்த மூவருக்கு ஆயுள்
/
சிறுமி பாலியல் பலாத்காரம்: அரூரை சேர்ந்த மூவருக்கு ஆயுள்
சிறுமி பாலியல் பலாத்காரம்: அரூரை சேர்ந்த மூவருக்கு ஆயுள்
சிறுமி பாலியல் பலாத்காரம்: அரூரை சேர்ந்த மூவருக்கு ஆயுள்
ADDED : பிப் 14, 2024 11:03 AM
தர்மபுரி: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த, 14 வயது சிறுமி கடந்த, 2015ம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சந்திரபோஸ், 26, என்பவர் சிறுமியை போட்டோ எடுத்து மிரட்டி வந்துள்ளார். பின்னர் சந்திரபோஸ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முபாரக், 26, சந்தோஷ், 27, ஆகியோர் சிறுமியை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக, அரூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ மற்றும் எஸ்.சி., எஸ்.டி., தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தனர்.
தர்மபுரி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. சந்திரபோஸ், முபாரக், சந்தோஷ் ஆகிய மூன்று பேரும் குற்றம் செய்தது உறுதியானது. இதையடுத்து மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா, 30 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சையத் பர்க்கத்துல்லா தீர்ப்பு அளித்தார்.

