ADDED : ஜன 26, 2026 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி கடத்துார் ஒன்றியம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி, இருளர் காலனியில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி, குருபரஹள்ளி ஊராட்சி, தின்னஹள்ளி புதுாரில், 8.30 லட்சம் ரூபாயில் பல்நோக்கு மைய கட்டட பணி, திப்பிரெட்டிஹள்ளி ஊராட்சி மணிபுரத்தில், 8.38 லட்சம் ரூபாயில் பல்நோக்கு மைய கட்டடம் கட்டும் பணி நடக்கிறது.
மொத்தம், 24.68 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் புதிய பணிகளுக்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

