ADDED : செப் 27, 2024 07:26 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, பாகலஹள்ளி பஞ்., உட்பட்ட சிக்கண்ணா கவுண்டர் ஏரியில், சிவாடியிலுள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பாக, துாய்மை பாரத இயக்கம் நிகழ்ச்சி நடந்தது. நல்லம்பள்ளி பி.டி.ஓ.,க்கள் லோகநாதன், சர்ஹோத்தமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், 5.50 ஏக்கர் பரப்புள்ள சிக்கண்ணா கவுண்டர் ஏரியிலிருந்த, சீமைகருவேல மரங்கள், குப்பை அகற்றும் பணி நடந்தது. தொடர்ந்து, ஏரி கரையை ஒட்டி, 100 மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நட்டு வைத்தனர். துாய்மை பாரத இயக்கத்தின் முக்கியத்துவம், நீர்நிலை பாதுகாப்பு குறித்து, எச்.பி.சி.எல்., நிறுவன அதிகாரிகள் கிஷோர், சிவசங்கர் ஆகியோர் பொதுமக்களிடம் எடுத்து கூறினர்.
இதில், பாகலஹள்ளி பஞ்., தலைவர் முருகன், மற்றும் பெட்ரோலிய நிறுவனத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஹரிசிங், பிரதீப் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.

