/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மக்கள் ஆர்ப்பாட்டம்
/
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மக்கள் ஆர்ப்பாட்டம்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மக்கள் ஆர்ப்பாட்டம்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 28, 2024 02:36 AM
பென்னாகரம்:பென்னாகரம்
அடுத்த கூத்தப்பாடி பஞ்.,க்கு உட்பட்ட பூதிப்பட்டியில், 200க்கும்
மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு ஓராண்டுக்கும் மேல்
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வருவதில்லை.
அதிகாரிகளிடம் பலமுறை
மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் அப்பகுதி மக்கள் நேற்று,
பென்னாகரம் பி.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பி.டி.ஓ.,
கிருஷ்ணன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்மந்தப்பட்ட இடத்தை
நேரில் பார்வையிடுவதாக கூறியதை அடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.
இதையடுத்து, பூதிப்பட்டிக்கு பி.டி.ஓ., சென்று ஆய்வு மேற்கொண்டு,
குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு
உத்தரவிட்டார்.