ADDED : நவ 17, 2024 01:36 AM
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
அரூர், நவ. 17-
அரூர் பஸ் ஸ்டாண்டில், நேற்று மா.கம்யூ., கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ச்சுனன் ஆகியோர் பேசினர். இதில், தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, காவிரி உபரி நீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், நிர்வாகிகள் கோவிந்தன், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

