/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
ADDED : டிச 21, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
தர்மபுரி, டிச. 21-
தர்மபுரி குமாரசாமிபேட்டை, அண்ணா நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற நகராட்சி மின் பணியாளர் சுப்பிரமணியன், 71. கடந்த, 17 அன்று அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், தன் மனைவியுடன் சேலம் தனியார் மருத்துவமனைக்கு சென்றார். தொடர்ந்து, 18 மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 8 கிராம் தங்க நாணயம், 70 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. சுப்பிரமணியன் அளித்த புகார்படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

