/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மழை, வெள்ளம் தகவல்களை அறிய 'டி.என்., அலர்ட்' செயலி அறிமுகம்
/
மழை, வெள்ளம் தகவல்களை அறிய 'டி.என்., அலர்ட்' செயலி அறிமுகம்
மழை, வெள்ளம் தகவல்களை அறிய 'டி.என்., அலர்ட்' செயலி அறிமுகம்
மழை, வெள்ளம் தகவல்களை அறிய 'டி.என்., அலர்ட்' செயலி அறிமுகம்
ADDED : அக் 17, 2024 01:30 AM
மழை, வெள்ளம் தகவல்களை அறிய
'டி.என்., அலர்ட்' செயலி அறிமுகம்
தர்மபுரி, அக். 17-
வடகிழக்கு பருவமழையின் போது, மழை, வெள்ளம் குறித்த தகவல்களை முன்கூட்டி பொதுமக்கள் எளிதாக, உடனுக்குடன் அறிய, 'டி.என்., அலர்ட்' (TNAlert App) என்ற மொபைல் செயலியை, தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளதாக, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இச்செயலி மூலம், பொதுமக்கள் தங்கள் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை, தமிழில் அறியலாம். இதில், அடுத்தடுத்த, 4 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு, தற்போதைய வானிலை நிலவரம், தினசரி மழை அளவு, செயற்கைக்கோள் புகைப் படங்கள், பேரிடர் காலத்தில் பாதிக்கக்கூடிய பகுதிகளின் விபரங்கள், அருகிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு விபரங்களை எளிதாக அறியலாம்.
மேலும், மழை, வெள்ளம் தொடர்பான புகார்கள் இச்செயலியில் தெரிவித்தால், மாவட்ட நிர்வாகத்தின் மூலம், துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில், 24 மணி நேரமும் இயங்கும் இலவச எண்ணில், 1077 (04342 - -231077) பேரிடர் தொடர்பான புகார் தெரிவிக்கலாம். 'டி.என்., அலர்ட்' செயலியை 'கூகுள் பிளே ஸ்டோர்' மற்றும் 'ஐ.ஓ.எ.எஸ்., ஆப்' ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து, பயன்படுத்த ஏதுவாக, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை மூலம், வசதி செய்யப்பட்டுள்ளது.
இதை, பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், முன்கள பணியாளர்கள், அரசு சாரா அமைப்பினர் என, அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

