/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் வீட்டின் மீது மோதி சிறுமி பலி
/
கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் வீட்டின் மீது மோதி சிறுமி பலி
கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் வீட்டின் மீது மோதி சிறுமி பலி
கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் வீட்டின் மீது மோதி சிறுமி பலி
ADDED : ஜூலை 24, 2025 12:20 AM

தர்மபுரி,:தர்மபுரி அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ், வீட்டின் மீது மோதியதில், 4 வயது சிறுமி உயிரிழந்தார்.
தர்மபுரி அடுத்த நுாலஹள்ளியில் இருந்து, தர்மபுரி நோக்கி நேற்று காலை, 9:30 மணிக்கு வந்த அரசு டவுன் பஸ்சை தேவராஜ், 45, ஓட்டினார். பஸ்சில் நடத்துநர் உட்பட, 10க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர்.
உழவன்கொட்டாய் அருகே பஸ் வந்தபோது, திடீரென ஸ்டீயரிங் பழுதானதால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரமிருந்த பூ வியாபாரி ராமு என்பவரது வீட்டின் மீது மோதி நின்றது.
இதில், பஸ்சின் முன்பகுதி மற்றும் வீட்டின் ஒரு பகுதி மிகவும் சேதமானது.
இதில் வீட்டிலிருந்த அதே பகுதியை சேர்ந்த நரசிம்மன் - சோனியா தம்பதியின் மகள் ஹத்விகா, 4, ஓட்டுநர் தேவராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அவர்களை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, ஹத்விகா உயிரிழந்தார்.
விபத்தில் சிக்கிய அரசு பஸ்சை காலை, 11:00 மணிக்கு போலீசார் எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது, பொதுமக்கள் பஸ்சை எடுக்க விடாமல் தடுத்தனர். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி தாசில்தார் சவுகத் அலி பேச்சு நடத்தி, மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தார்.

