/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சமூக நீதி குறித்து இ.பி.எஸ்., பேசக்கூடாது: அன்புமணி சொல்கிறார்!
/
சமூக நீதி குறித்து இ.பி.எஸ்., பேசக்கூடாது: அன்புமணி சொல்கிறார்!
சமூக நீதி குறித்து இ.பி.எஸ்., பேசக்கூடாது: அன்புமணி சொல்கிறார்!
சமூக நீதி குறித்து இ.பி.எஸ்., பேசக்கூடாது: அன்புமணி சொல்கிறார்!
ADDED : ஏப் 03, 2024 02:23 PM

தர்மபுரி: சமூக நீதி குறித்து இ.பி.எஸ்., பேசக்கூடாது என தர்மபுரியில் நிருபர்கள் சந்திப்பில் பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டம் சந்தைப்பேட்டையில் பா.ம.க., வேட்பாளரும், மனைவியுமான சவுமியாவுக்கு ஆதரவாக அன்புமணி மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பா.ம.க., போராட்டத்தால் தான் தர்மபுரி மாவட்டம் வளர்ந்துள்ளது.
அடையாள அரசியல் பா.ம.க.,விற்கு தெரியாது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநிலத்திற்கு அதிகாரம் இல்லை முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். அனைத்து மாநிலங்களிலும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
பா.ம.க., திடீரென பா.ஜ., கூட்டணியில் சேர்ந்தது போல் சிலர் பேசுகின்றனர். இதற்கு முன்பாக பல தேர்தல்களில் பா.ஜ., உடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. பா.ஜ.,பாமக கூட்டணி குறித்து பேசுவது வயிற்றெரிச்சல். சமூக நீதிக்காக திமுக, அதிமுக செய்தது என்ன?. ஸ்டாலினும், இ.பி.எஸ்.,ம் என்ன செய்தார்கள். பா.ம.க.,வால் தான் பழனிசாமி முதல்வராக தொடர்ந்தார். கூட்டணி என சொன்னதால் தான் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடுக்கு இ.பி.எஸ்., ஒப்பு கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.

