தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை

தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை

தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை


ADDED : நவ 06, 2024 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தி.மு.க., ஓட்டுச்சாவடி

முகவர்கள் ஆலோசனை

பாலக்கோடு, நவ. 6-

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றிய தி.மு.க., கட்சி அலுவலகத்தில், ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், ஒன்றிய செயலாளர் முனியப்பன் தலைமையில் நடந்தது.

மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய அவைத் தலைவர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைப்பதை, லட்சியமாக கொண்டு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கடுமையாக உழைத்ததை போல் வரும் தேர்தலிலும் கடுமையாக பாடுபட வேண்டும். மேலும், புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமில், 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் கட்டாயம் நாம் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கட்சியினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

பாலக்கோடு சட்டசபை தொகுதி பொறுப்பாளர் அய்யப்பன், பொதுக்குழு உறுப்பினர் முத்துராஜா, ஒன்றிய துணை செயலாளர் ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் அழகுசிங்கம், முத்துசாமி உள்பட பலர்

பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us