ADDED : செப் 28, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்:தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., வக்கீல் அணி சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, அரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பி.எல்.ஏ., 2களுக்கு, பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம், அரூரில் நேற்று நடந்தது.
மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில், மேற்கு மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் சந்திரசேகர், அரூர் தொகுதி பார்வையாளர் குமரேசன், ஒன்றிய செயலாளர்கள் சந்திரமோகன், தென்னரசு, சவுந்தரராசு, நகர செயலாளர் முல்லை ரவி, நிர்வாகிகள் முல்லை செழியன், தனபால் மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் தமிழழகன், வக்கீல் பொதிகைவேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

