sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ '100 நாள் வேலை திட்டத்தில் ஏமாற்றிய தி.மு.க.,'

'100 நாள் வேலை திட்டத்தில் ஏமாற்றிய தி.மு.க.,'

'100 நாள் வேலை திட்டத்தில் ஏமாற்றிய தி.மு.க.,'


ADDED : ஏப் 16, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 04:43 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரிமங்கலம்: ''100 வேலை திட்டத்தில், வேலையை முழுமையாக வழங்-காமல், தி.மு.க., அரசு மக்களை ஏமாற்றியுள்ளது'' என, பாலக்-கோடு அ.தி.மு.க., வேட்பாளர் அன்பழகன், தேர்தல் பிரசாரத்தில் குற்றசாட்டு தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் அன்பழகன் எம்.எல்.ஏ., நேற்று பாலக்-கோடு தொகுதிக்கு உட்பட்ட கெரகோடஹள்ளி, ஜெ.ஜெ.,நகர், கீழ்பொன்னேரி, அடிலம், பூனத்தனஹள்ளி, கோவிலுார், நாகனம் பட்டி உட்பட, 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில், விவசாயி கள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி, இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து, அவர் பேசியதாவது:தர்மபுரி மாவட்டத்திற்கு கடந்த, 5 ஆண்டில், தி.மு.க., அரசு எந்-தவொரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தி.மு.க., தர்மபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை என்பதால், மாவட்ட மக்களை பழிவாங்கி வருகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியின் போது, 100 நாள் வேலை திட்டத்தில், அனைவருக்கும் பாகுபாடின்றி, 100 நாள் வேலை வழங்கப்பட்-டது. ஆனால், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், வேலை நாளை குறைத்து விட்டனர். குறிப்பாக, ஒரு வருடத்திற்கு, 20 முதல், 30 நாள் வேலை தான் வழங்கி உள்ளனர். அதற்கு பணத்தை சரியாக வழங்கவில்லை. இது குறித்து கேட்டால், மத்-திய அரசு வேலை தரவில்லை, பணம் தரவில்லை என பொய்-யான தகவல்களை மக்களிடையே பரப்பி வருகின்றனர். கடந்த, 2 ஆண்டுக்கு முன், லோக்சபா தேர்தலின்போது, 125 நாள் வேலை வழங்குவோம் என, முதல்வர் ஸ்டாலின், வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர்களால், 100 நாள் வேலையை கூட முழுமையாக வழங்க

முடியவில்லை.

அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் அனைவருக்கும், 150 நாள் வேலை வழங்கப்படும். அதேபோல் கடந்த, அ.தி.மு.க., ஆட்-சியில், 52 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சி யின், 5 ஆண்டுகளில், இந்த ஆண்டு மட்டும் மாணவர்களின் ஓட்டுக்காக லேப்டாப் வழங்-கினர். இது மாணவர்கள் மீது கொண்ட அக்கறை கிடையாது, ஓட்-டுக்காக, தி.மு.க.,வினர் போடும் வேஷம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

இந்த பிரசாரத்தின்போது, அ.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., - அ.ம.மு.க., உட்பட

கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர்

உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us