/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
திருப்பாவை, திருவெம்பாவை பாடியபடி பக்தர்கள் ஊர்வலம்
/
திருப்பாவை, திருவெம்பாவை பாடியபடி பக்தர்கள் ஊர்வலம்
திருப்பாவை, திருவெம்பாவை பாடியபடி பக்தர்கள் ஊர்வலம்
திருப்பாவை, திருவெம்பாவை பாடியபடி பக்தர்கள் ஊர்வலம்
ADDED : டிச 17, 2025 08:04 AM
தர்மபுரி: மார்கழி மாத பிறப்பையொட்டி, தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும், நேற்று அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது.
பின்னர், சுவாமிக்கு சிறப்பு அலங்கார சேவை, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதன் ஒரு பகுதியாக, தர்மபுரி குமார-சாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. இலக்-கியம்பட்டி பகுதியில் உள்ள பெருமாள் பக்தர்கள் அங்குள்ள பெருமாள் கோவிலில் இருந்து, திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் பக்தி பாடல்களை பாடியபடி, சாலை மாரியம்மன் கோவில், ஜெகநாதன் கோவில் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.