/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
படைப்பாளர், பதிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
/
படைப்பாளர், பதிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூலை 29, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி மாவட்ட படைப்பாளர், பதிப்பாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம், தர்மபுரியில் நேற்று நடந்தது. சங்க தலைவர் நுாலகர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் பழனி, பொருளாளர் அறிவுடைநம்பி ஆகியோர் அறிக்கை வாசித்தனர்.
இதில், தர்மபுரி மாவட்டத்தில், நடக்கவுள்ள புத்தக திருவிழாவில், மாவட்ட படைப்பாளர்களின் நுால்கள் வெளியீட்டு விழா நடத்துவது மற்றும் நுால்கள் விற்பனை அரங்கு வைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதில், படைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நாகராஜன் நன்றி கூறினார்.

