/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தடகள போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
தடகள போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : பிப் 09, 2024 11:22 AM
ஓசூர்: தடகள போட்டியில் வெற்றி பெற்ற பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அந்திவாடி ஸ்டேடியத்தில், வாக்கர்ஸ் அசோசியேஷன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடந்தன. கடந்த, 3 மற்றும் 4ம் தேதி என, இரு நாட்கள் நடந்த போட்டிகளில், 1,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டிகள், 12 வயதுக்கு உட்பட்டோர், 14, 16, மற்றும் 18 வயதுக்கு உட்பட்டோர் என, 4 பிரிவுகளாக நடத்தப்பட்டது. குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலிருந்து, 15 மாணவர்கள் கலந்து கொண்டனர். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், 8ம் வகுப்பு மாணவர் மாதேஷ் குண்டு எறிதலில் 2ம் இடமும், 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், 6ம் வகுப்பு மாணவர் குமார், 50 மீ., ஓட்டப்பந்தயத்தில், 2ம் இடமும் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னாகேஷ் பாராட்டினார். உடற்கல்வி ஆசிரியை விஜயலட்சுமி, எஸ்.எம்.சி., மஞ்சுளா, வார்டு கவுன்சிலர்
ரஜினிகாந்த் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

