/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புலிகரையில் போலீஸ் ஸ்டேஷன் காணொலியில் முதல்வர் துவக்கம்
/
புலிகரையில் போலீஸ் ஸ்டேஷன் காணொலியில் முதல்வர் துவக்கம்
புலிகரையில் போலீஸ் ஸ்டேஷன் காணொலியில் முதல்வர் துவக்கம்
புலிகரையில் போலீஸ் ஸ்டேஷன் காணொலியில் முதல்வர் துவக்கம்
ADDED : டிச 23, 2025 05:59 AM

பாலக்கோடு: பாலக்கோடு உட்கோட்டம் புலிகரையில் புதிய போலீஸ் ஸ்டேஷனை, தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், 3 புதிய உட்கோட்டங்கள், தர்மபுரி மாவட்டத்தில் புலிகரை உட்பட, 10 புதிய போலீஸ் ஸ்டேஷன்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று, காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதன்படி, பாலக்கோடு உட்கோட்டத்தில் புலிகரையை மையமாக கொண்டு கடகத்துார், செல்லியம்பட்டி, சோமனஹள்ளி, பி.கொல்லஹள்ளி, பூமாண்டஹள்ளி, பூகானஹள்ளி, கம்மாளப்பட்டி என, 8 பஞ்.,க்கு உட்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய, புலிகரையில் புதிய போலீஸ் ஸ்டேஷனை, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று, காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் ஸ்டேஷனில் குத்துவிளக்கேற்றினார். தர்மபுரி ஏ.டி.எஸ்.பி.,க்கள் பாலசுப்பிரமணியம், ஸ்ரீதரன், பாலக்கோடு டி.எஸ்.பி., ராஜசுந்தர், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர். தர்மபுரி மாவட்டத்தில், 4 அனைத்து மகளிர் ஸ்டேஷன் உட்பட, 29 போலீஸ் ஸ்டேஷன்கள் இருந்த நிலையில், 30வது ஸ்டேஷனாக புலிகரை ஸ்டேஷன் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

