/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை
/
அரூரில் நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை
ADDED : மார் 09, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட கோல்டன் சிட்டியில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது.
அதே போல், 14வது வார்டில், 7.30 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி, அரூர் டவுன் பஞ்., ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் கட்டும் பணி ஆகியவற்றிற்கு பூமி பூஜை நடந்தது.
இந்நிகழ்ச்சிகளில் டவுன் பஞ்., தலைவர் இந்திராணி, துணைத்தலைவர் தனபால் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர். இதில், அரூர் தி.மு.க., நகர செயலாளர் முல்லைரவி, நிர்வாகிகள் முஜீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

