/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேர்தலில் ஓட்டளிக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் வேண்டுகோள்
/
தேர்தலில் ஓட்டளிக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் வேண்டுகோள்
தேர்தலில் ஓட்டளிக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் வேண்டுகோள்
தேர்தலில் ஓட்டளிக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் வேண்டுகோள்
ADDED : மார் 28, 2024 06:56 AM
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, எச்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த பெரும்பாலான மக்கள், கூலி வேலைக்காக கோவை, திருப்பூர், கேரளா உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு சென்று விடுகின்றனர்.
இதனால், கடந்த தேர்தல்களில் இக்கிராமத்தில் மிகக்குறைந்த ஓட்டுப்பதிவு நடந்தது. இதை கருத்தில் கொண்டு, நேற்று மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் உள்ளூர் மகளிர் குழுக்கள் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கோபிநாதம்பட்டி பஞ்., அலுவலக வளாகத்தில் துவங்கிய பேரணியை, அரூர் ஆர்.டி.ஓ., மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வில்சன் ராஜசேகர் துவக்கி வைத்தார்.
பேரணியில் மகளிர் சுய உதவி குழுவினர் ஏப்., 19ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்பதை பொதுமக்களிடம் வலியுறுத்தினர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி இறுதியில் பஞ்., அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. அங்கு வரையப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்வு கோலத்தை அனைவரும் பார்வையிட்டனர். இதில், வட்டார மேலாளர் அறிவழகன், வருவாய்த்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, அங்குள்ள நடுநிலைப்பள்ளிக்கு சென்ற ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரிடம், பெற்றோர் எங்கு பணிபுரிகிறார்கள் என்பது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்கள், தங்கள் பெற்றோரிடம் மொபைல்போனில் பேசும்போது, ஏப்., 19ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் ஓட்டு போட வர வலியுறுத்த வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

