/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு நிலத்தில் மண், கல் கடத்தல் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆய்வு
/
அரசு நிலத்தில் மண், கல் கடத்தல் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆய்வு
அரசு நிலத்தில் மண், கல் கடத்தல் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆய்வு
அரசு நிலத்தில் மண், கல் கடத்தல் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : டிச 22, 2025 08:39 AM

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொம்மிடி வருவாய் கிராமத்திலுள்ள வெள்ளாளப்பட்டியில், 1.39 ஏக்கர் அரசு புறம்போக்கு கல்லாங்குத்து நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வருவாய் துறை அனுமதி இன்றி சிலர், சமன் செய்கிறோம் எனக்கூறி கற்கள், மண் உள்ளிட்ட கனிம வளங்களை கடத்தி, விற்பனை செய்து வருகின்றனர்.
இதையறிந்த பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி உள்ளிட்ட அக்கட்சியினர் அவ்விடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த நபர்களிடம் இந்த அரசு நிலத்தை சமன் செய்யவும், கற்களை உடைக்க யார் அனுமதி கொடுத்தது என, எம்.எல்.ஏ., கேட்டார். மேலும் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசில் புகார் செய்வதாகவும், நடவடிக்கை இல்லை எனில், கட்சி தலைமையின் அனுமதி பெற்று போராட்டம் நடத்தப்படும் என, எம்.எல்.ஏ., கோவிந்தசாமி கூறினார். இதையடுத்து நிலம் சமன் செய்யும் பணி நிறுத்தப்பட்டது.