தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு

100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு

100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு


ADDED : மார் 27, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பென்னாகரம்:பென்னாகரத்தில் வருகின்ற சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், 'தேர்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ் தலைமை வகித்தார். அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், இணை இயக்குனர் விஜயலட்சுமி, வட்டார மருத்துவ அலுவலர் செவிலியர் உள்ளிட்டோர் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி, உறுதிமொழி ஏற்றனர். ஏப்ரல், 23 அன்று அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாகனங்களில் விழிப்புணர்வு சீட்டுகள் ஒட்டப்பட்டன. தொடர்ந்து, அனைவரும் வாக்களிக்கும் விதமாக மருத்துவர்கள், செவிலியர்கள், பெண்கள் அனைவரும் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பிரசார ஊர்வலத்தை, மாவட்ட தேர்தல் அலுவலர் சதீஷ் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மருத்துவ இணை இயக்குனர் விஜயலட்சுமி, வட்டார மருத்துவ அலுவலர் கனிமொழி, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஆறுமுகம், பென்னாகரம் பி.டி.ஓ., லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us