/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஜீப் மீது அரசு பஸ் மோதி போலீஸ்காரர் உள்பட மூவர் பலி
/
ஜீப் மீது அரசு பஸ் மோதி போலீஸ்காரர் உள்பட மூவர் பலி
ஜீப் மீது அரசு பஸ் மோதி போலீஸ்காரர் உள்பட மூவர் பலி
ஜீப் மீது அரசு பஸ் மோதி போலீஸ்காரர் உள்பட மூவர் பலி
ADDED : ஏப் 13, 2024 10:44 AM
கீழ்பென்னாத்துார்: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாநில சிறப்பு காவல் படையின் உதவி கமாண்டன்ட் பிரபாகரா, 50, சிறப்பு காவல்படை அதிகாரி ஹேமந்த், 42, போலீஸ்காரர் விட்டல், 35, ஆகிய மூவரும், சேலம் லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தனர். தமிழக சிறப்பு காவல் படையை சேர்ந்த தினேஷ், 29, ஜெயக்குமார், 37, ஆகியோர் சேலத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் ஐந்து பேரும், நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு போலீஸ் ஜீப்பில் சென்றனர். தினேஷ் ஜீப்பை ஓட்டினார். காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று, மாலையில் சேலம் நோக்கி திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் வழியாக வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, கீழ்பென்னாத்துார் எம்.ஜி.ஆர். நகர் பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில், எதிரே திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ், போலீஸ் ஜீப் மீது மோதியது. இதில் ஜீப் நொறுங்கியது; ஐந்து பேரும் இடிபாடுகளில் சிக்கினர். பொதுமக்கள் அவர்களை மீட்டனர். இதில் பிரபாகரா, தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலயே பலியாயினர்.படுகாயமடைந்த விட்டல், ஹேமந்த், ஜெயக்குமார் ஆகியோர், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு, விட்டல் பலியானார். ஹேமந்த், ஜெயக்குமார் படுகாயத்தடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கீழ்பென்னாத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மூவரின் உடலுக்கும், திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. போலீஸ் எஸ்.பி., கார்த்திகேயன் பங்கேற்றார்.

