/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சர்வீஸ் ரோட்டில் மின்விளக்கு இல்லை அவதிக்கு ஆளாகும் வாகன ஓட்டிகள்
/
சர்வீஸ் ரோட்டில் மின்விளக்கு இல்லை அவதிக்கு ஆளாகும் வாகன ஓட்டிகள்
சர்வீஸ் ரோட்டில் மின்விளக்கு இல்லை அவதிக்கு ஆளாகும் வாகன ஓட்டிகள்
சர்வீஸ் ரோட்டில் மின்விளக்கு இல்லை அவதிக்கு ஆளாகும் வாகன ஓட்டிகள்
ADDED : ஏப் 23, 2024 04:05 AM
தர்மபுரி: புதியதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில், மின்விளக்கு மற்றும் தகவல் பலகை இல்லாததால், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை முதல் பாலக்கோடு வழியாக, ஓசூர் வரை புதிய, 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது. தற்போது, அதியமான்கோட்டை முதல் பாலக்கோடு காடுசெட்டிப்பட்டி வரை பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. இவ்வழியாக, கனரக வாகனங்கள், கார் உள்ளிட்டவை சென்று வருகின்றன.
இதன் சர்வீஸ் சாலையில் மின்விளக்குகள், ஊர் பெயர் பலகைகள் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், வழி தெரியாமல் நீண்ட துாரம் சென்று விட்டு, மீண்டும் அதே வழியில் திரும்பி வருகின்றனர். இதில், எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும், இச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள நிழற்கூடங்களிலும், மின் இணைப்பு இல்லாமல் இருட்டாக உள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் இரவு நேரத்தில் அச்சத்துடன் உள்ளனர். எனவே, மக்களின் நலன்கருதி இச்சாலையில் மின்விளக்கு மற்றும் ஊர் பெயர் பலகைகள் வைக்க, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

