/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பா.ஜ., கூட்டணியை விட்டு வெளியேறிய அ.தி.மு.க., இரட்டை வேடம்: முத்தரசன்
/
பா.ஜ., கூட்டணியை விட்டு வெளியேறிய அ.தி.மு.க., இரட்டை வேடம்: முத்தரசன்
பா.ஜ., கூட்டணியை விட்டு வெளியேறிய அ.தி.மு.க., இரட்டை வேடம்: முத்தரசன்
பா.ஜ., கூட்டணியை விட்டு வெளியேறிய அ.தி.மு.க., இரட்டை வேடம்: முத்தரசன்
ADDED : ஏப் 04, 2024 04:59 AM
தர்மபுரி: ''பா.ஜ., கூட்டணியை விட்டு வெளியேறிய, அ.தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது,'' என, இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
தர்மபுரி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மணியை ஆதரித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள நேற்று வந்த அவர், தர்மபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது: கட்சித்தீவை மீட்க, பிரதமர் மோடி கடந்த, 10 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்தபட்சம் இது தொடர்பாக, ஒரு கடிதம் கூட அவர் இலங்கை அரசுக்கு எழுதவில்லை என, இலங்கை அமைச்சரே தெரிவித்திருக்கிறார். கடந்த, 2019 பொதுத்தேர்தலில் பாஜ., 31 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. அவர்களுக்கு எதிராக, 69 சதவிகிதம் வாக்குகள் பெற்ற கட்சிகள், பிளவுப்பட்டு அந்தத் தேர்தலை சந்தித்தது. ஆனால், அக்கட்சிகள் தற்போது 'இண்டியா' கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.
கடந்த காலத்தில், பாஜ., கொண்டு வந்த, 3 வேளாண் சட்டங்கள், தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தம், குடியுரிமை திருத்தச்சட்டம் என, எல்லாவற்றிற்கும் ஆதரவாக செயல்பட்டு, தற்போது, பா.ஜ., கூட்டணியை விட்டு வெளியேறியதாக, அ.தி.மு.க., வேடம் போடுகிறது. தேர்தல் பிரசாரங்களில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பா.ஜ.,வை விமர்சனம் செய்வதை தவிர்த்து வருகிறார்.
இவ்வாறு, அவர் கூறினார்.

