ADDED : டிச 09, 2025 05:56 AM
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துாரை சேர்ந்தவர் அன்பு, 40. இவர், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில் கடத்துார் - அரூர் ரோட்டில் நகை கடை வைத்திருக்கும் நாகராஜகுப்தா, 53 மற்றும், 10க்கும் மேற்பட்ட கடைகளில் புகுந்து, கடையில் உள்ளவர்களை தகாத வார்த்தையால் பேசி தாக்கினார்.
தொடர்ந்து பொதுவெளி யில் சென்ற மக்களையும் தகாத வார்த்தையால் பேசினார். நாகராஜகுப்தா புகார் படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிந்தனர். வியாபாரிகள் மீதான தாக்குதலை கண்டித்தும், வணிகர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என கோரிக்கையை வைத்தும், நேற்று காலை வணிகர்கள் முழு கடையடைப்பு நடத்தினர். அரூர் டி.எஸ்.பி., சதீஷ்குமார் வணிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, அன்பு மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து மதியம்,12:00 மணிக்கு வியாபாரிகள் கடையடைப்பை கைவிட்டு, கடைகளை திறந்தனர்.

