தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து

வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து

வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து


ADDED : மே 21, 2024 11:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2024 11:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, சித்தேரி மலையிலிருந்து, தடுப்பணைக்கு நீர்வரத்து வருகிறது. இதிலிருந்து, திறந்து விடப்படும் நீரால் தாதரவலசை, கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும்.

கடந்த, சில நாட்களாக அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சித்தேரி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து வரத் துவங்கியுள்ளது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தடுப்பணைக்கு, 10 கன அடி நீர்வரத்து இருந்தது. தடுப்பணையின் மொத்த கொள்ளளவான, 34.5 அடியில், 20 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us