ADDED : பிப் 05, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே சரக்கு ரயிலில் சிக்கிய வாலிபர் பலியானார்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த வடகரையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் நிலவழகன், 31. மனநலம் பாதித்தவர்.
நேற்று மாலை 6:00 மணியளவில் பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் ரயில்வே கேட் அருகே சென்னை - திருச்சி ரயில் பாதையை கடக்க முயன்றார்.
அப்போது, சென்னை யில் இருந்து திருச்சி சென்ற சரக்கு ரயிலில் சிக்கிய நிலவழகன் உடல் சிதறி இறந்தார்.
இதையறிந்த லோகோ பைலட் ரயிலை நிறுத்தி, விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், 30 நிமிடம் தாமதமாக சரக்கு ரயில் புறப்பட்டது.
விருத்தாசலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, சம்பவம் குறித்து விசாரித்தனர்.

