/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கேட்பார், மேய்ப்பார் இன்றி பேரூராட்சி அலுவலகம் தான்தோன்றி தனமாக ஊழியர்கள்

ADDED : பிப் 27, 2024 11:50 PM
புவனகிரி பேரூராட்சியில் பெருமளவில் சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் கடை வாடகை பாக்கி வசூல் செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தற்போது பணியில் உள்ள செயல் அலுவலர் விரைவில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், கூடுதல் பொறுப்பாக ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியிலும் பணியாற்றி வருகிறார்.
இதனால், கேட்பார், மேய்ப்பார் இன்றி அலுவலகத்தில் சிலர் விடுப்பிலும், சிலர் அலுவலகம் வந்து கையெழுத்தை போட்டு விட்டு சொந்த வேலைக்கும்் சென்று விடுகின்றனர்.
இதன் காரணமாக புவனகிரி பேரூராட்சி பகுதிகளில் திட்டப் பணிகள் முடங்கிப் போனதுடன், சொத்து வரி, குடிநீர் மற்றும் வாடகை பாக்கி வசூலிப்பதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதிய வீட்டிற்கு அனுமதி வேண்டி விண்ணப்பித்தவர்களிடம் அடாவடியாக வசூல் செய்வதும் அரங்கேறி வருகிறது.
இது தொடர்பாக, சமீபத்தில் எழுத்தருக்கும், கவுன்சிலருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.