ADDED : அக் 07, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம்: சிறுபாக்கத்தில் கூடுதல் வங்கிகள் துவங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
சிறுபாக்கத்தில் தேசிய மயமாக்கப்பட்ட ஸ்டேட் பாங்க் கிளை உள்ளது. இதில் சிறுபாக்கம், அரசங்குடி, எஸ்.புதுார், பனையாந்துார், வள்ளிமதுரம், வ.மேட்டூர், நரையூர், ஒரங்கூர் உட்பட பல கிராம மக்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
வங்கியில் பணம் எடுக்க மற்றும் பணம் செலுத்த தினசரி கிராம மக்கள் அதிகளவில் குவிந்து விடுவர்.
தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வருவதால், தங்களின் தேவைகள் முடிய வெகுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
எனவே, கிராம மக்கள் நலன் கருதி, சிறுபாக்கத்தில் கூடுதலாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி களை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

