/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இடிக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி புதியதாக கட்டுவது எப்போது
/
இடிக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி புதியதாக கட்டுவது எப்போது
இடிக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி புதியதாக கட்டுவது எப்போது
இடிக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி புதியதாக கட்டுவது எப்போது
ADDED : நவ 01, 2024 05:58 AM
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம்,குமளங்குளம் ஊராட்சியில் இடிக்கப்பட்ட மேல்நிலைநீர்தேக்க தொட்டிகளை கட்ட நடவடிக்கை எடுக்க போதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலுார் ஒன்றியத்திற்குட்பட்ட சி.என்.பாளையம் ஊராட்சி மலையாண்டவர் கோவில் அடடிவாரத்தில் இருந்த மேல்நிலைநீர்தேக்க தொட்டி பழுதடைந்திருந்தது.
இதனால் கடந்த ஜூன் மாதம் இடிக்கப்பட்டது.
இதனால் பழையபாளையம்,மீனாட்சிபேட்டை தெரு,மலையாண்டவர் கோவில் தெரு,கடைவீதி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் போர்வெல் மூலமாக நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.இதனால் 4 பகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தண்ணீர் வழங்கிட இயலவில்லை.
இதனால் ஒவ்வொரு பகுதியாக தண்ணீர் வழங்கப்பட்டு வருவதால் மாணவர்கள், பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, வேலைக்கு செல்ல முடியவில்லை.சில நேரங்களில் மின்சாரம் தடைபடுவதால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதேபோல் குமளங்குளம் ஊராட்சி ராணிப்பேட்டையில் பழுதடைந்த மேல்நிலைநீர்தேக்க தொட்டியும் இடிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சரியான நேரத்தில் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.
ஆகையால் இந்த இரண்டு பகுதியிலும் புதிய மேல்நிலைநீர்தேக்க தொட்டி கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

