/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் வீரவணக்க நாள் கூட்டம்
/
கடலுாரில் வீரவணக்க நாள் கூட்டம்
ADDED : ஜன 28, 2026 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: ம.தி.மு.க., மாணவரணி சார்பில், மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் கடலுாரில் நடந்தது.
மஞ்சக்குப்பம் அண்ணா சிலை, மஞ்சகுப்பம் அம்பேத்கர் சிலை, உழவர் சந்தை, முதுநகர் மணிகுண்டு ஆகிய இடங்களில் கூட்டம் நடந்தது.
கடலுார் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். தலைமை பேச்சாளர்கள் அழகிரி, ராஜாராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் மாநில தொண்டர் அணி துணை அமைப்பாளர் தமிழ்வாணன், தலைமை பேச்சாளர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் குமார், கடலுார் மாநகர துணைச் செயலாளர் ராஜி, அவைத்தலைவர் வெங்கட்நாராயணன், மாவட்ட இளைஞர் அமைப்பாளர் ராஜா மற்றும் ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் பங்கேற்றனர்.

